தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகை உயர்வு: அரசு பதிலளிக்க உத்தரவு - மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை உயர்வு

மதுரை: மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்தி உள்ளதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

By

Published : Oct 30, 2020, 7:56 PM IST

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் மதுரேசன். இவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாற்றுத்திறன் வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 90 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இவர் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பொதுவான விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதுபோல் சலுகைகள், வேலைவாய்ப்பு முன்னுரிமை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதேபோல பலரும் மனுக்களைத் தாக்கல்செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர், "தமிழ்நாடு அரசு மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை 15 லட்சம் ரூபாய் (தங்கப்பதக்கம்), 10 லட்சம் ரூபாய் (வெள்ளி பதக்கம்), 5 லட்சம் ரூபாய் (வெண்கலம்) என உயர்த்தி 2019இல் அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால் இந்த அரசாணை அடிப்படையில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசு தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் வெற்றவர்களுக்கு ரூ. 3 லட்சம், வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்குகிறது. இது மிகவும் குறைந்த தொகையாகும்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "குத்துச்சண்டை வீரர் மேரிகோம் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் 12ஆம் வகுப்புதான் படித்துள்ளார். அவர் பஞ்சாபில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ், உயர் நிலைக் கல்வியை தாண்டவில்லை. அவர் ரிசர்வ் வங்கி உதவி மேலாளாக நியமிக்கப்பட்டார்.

மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில், மத்திய அரசும்கூட விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரித்து உயர் பதவிகளில் அவர்களை நியமனம் செய்கிறது. இதேபோல் தமிழ்நாட்டிலும் விளையாட்டு வீரர்களை உயர் பதவிகளில் நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.

இந்த வழக்கில் மத்திய அரசு அலுவலர்கள் நவம்பர் 10ஆம் தேதி பதிலளிக்க வேண்டும். தவறினால் மத்திய அரசு அலுவலர்கள் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

மத்திய அரசு மாற்றுத்திறன் விளையாட்டுகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்துவது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மனுதாரருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்தி 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details