உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாமாக முன்வந்து தாக்கல்செய்த மனுவில், “கரூர் மாவட்டத்தில் சாயப் பட்டறைகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்தக் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைகிறது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் தூரம் திருப்பூர், கரூர் வழியாகச் செல்கிறது.
மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலுள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவனக் கழிவுகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர். இதை அரசு அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சாயக்கழிவு நீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டிருந்தது.