மதுரை:நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2, கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ கூறியது.
ஆனால், மனுதாரர் தனது ஆய்வில், சந்திரயான்-2 மிஷன் பணி தோல்வியடையவில்லை. ஆனால், அமெரிக்காவின் NASA / CIA-வால் திட்டமிட்டு சந்திரயான்-2 திசை திருப்பபட்டது. போலி மற்றும் தவறான புகைப்படங்களை வெளியிட்டு சந்திராயான் முடிவை தவறாக வெளியிட்டது.
இதை கடந்த 2015 ஆம் ஆண்டு நான் கண்டுபிடித்தேன். பிறகு திருவனந்தபுரம் VSSC தலைவர் அலுவலகத்தில் ISRO அதிகாரிகளிடம் 2 மணி நேரம் விளக்கமளித்து தனது ஆய்வு, கண்டுபிடிப்பு பற்றி விளக்கினேன். அவரது கண்டுபிடிப்பை சரிபார்க்க பேலோட் (அறிவியல் கருவி) சேர்ப்பதாக இஸ்ரோ உறுதியளித்தது. ஆனால், பின்னர் ISRO உறுதியளித்தபடி பேலோட் சேர்க்கவில்லை. நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் மனுக்களுக்கு பதிலளிக்கவில்லை.