சிவகங்கை மாவட்டத்தின் கிராம ஊராட்சி தலைவர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சிவகங்கையில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் சாலை அமைப்பதற்காக பேக்கேஜ் டெண்டர் முறை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது கிராம ஊராட்சி தலைவர்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் செயல். அந்தந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு அந்த கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கிராம ஊராட்சிகளில் 2019ஆம் ஆண்டுக்கு முன் கடந்த சில ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் இல்லை. இதனால் திட்ட அலுவலர் பேக்கேஜ் டெண்டர் முறையை விடுத்துள்ளார். ஆனால் தற்போது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் உள்ளனர், எனவே அவர்களுக்கு உரிய அதிகாரம் உள்ளது.