மதுரை:பேருந்து நிலையங்களிலும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடமும் கை பைகளை திருடும் சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தத் திருட்டில் தொடர்புடைய குற்றவாளியைக் கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையாளர் ராஜசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட குற்றவாளி
இந்நிலையில் பயணிகளிடம் கைப்பைகளை திருடும் பழங் குற்றவாளியான பாலசுப்பிரமணி என்ற சுப்புக்காளையை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மதுரை மாநகர பேருந்து நிலையங்களில் பயணிகளிடமிருந்து கைப்பைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.