மதுரை:மதுரை மாநகரை ஒட்டியுள்ள புறநகர் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரம் அரை நிர்வாணத்துடன் ஒருவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்து விட்டு தப்பி ஓடுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அரை நிர்வாணத்துடன் உள்ளாடைகளைத் திருடும் நபர்- வெளியான சிசிடிவி காட்சி - madurai district news
மதுரையின் புறநகர்ப் பகுதியில் இரவு நேரங்களில் அரை நிர்வாணத்துடன் திரியும் நபர், பெண்களின் சேலைகள், உள்ளாடைகளைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மதுரை உத்தங்குடி அருகே உள்ள வளர் நகர்ப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் அக்குறிப்பிட்ட நபரின் செய்கைகள் பதிவாகியுள்ளன.
அந்த சிசிடிவி காட்சியில் இளம் வயதுடைய அடையாளம் தெரியாத நபர், அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீடாக சென்று ஜன்னல்களை எட்டிப் பார்ப்பதும், வீட்டினுள் கொடிகளில் காயக்கூடிய பெண்களின் உள்ளாடைகள், சேலைகளை திருடிச் செல்வதும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ