மதுரை:ஹெச். ராஜா நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை திருமயத்தில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைப்பது தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.
அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் என் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
'என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி'
இந்நிலையில் திருமயம் காவல் துறையினர் திருமயம் நீதித் துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளனர். அந்தக் குற்றப் பத்திரிகையில் நான் தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜுலை 27இல் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.