மதுரை விமான நிலையத்திலிருந்து இன்று நண்பகல் 12.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விமானப் பயணிகளிடம் சோதனை செய்தபோது, பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் உபயோகப்படுத்தப்பட்ட ஐந்து துப்பாக்கி தோட்டா குப்பிகளும், உபயோகப்படுத்தப்படாத மூன்று துப்பாக்கி தோட்டாக்களும் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பயணியின் பெயர் புகாடியா லெஷ்மி லாவண்யா (வயது 41) என்றும்; ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
துப்பாக்கி தோட்டாக்கள் அவரிடம் எப்படி வந்தது, உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது அவருக்கு நக்சல் அமைப்பு போன்ற ஏதேனும் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்டது சம்பந்தமாக, விமான நிலைய அலுவலர்கள் கொடுத்தப் புகாரின் பேரில், பெருங்குடி காவல் நிலையத்தில் ஆந்திரப் பெண்ணிடம் துப்பாக்கி தோட்டாக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை: 'விவசாயிகள், விதை உற்பத்தித் துறைக்கு மாற்று வழி ஏற்படுத்தித் தரவேண்டும்'