தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரை தாக்கிய காவலர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ - கரோனா தொற்று : வெறும் கையால் இளைஞரின் முகத்தில் தாக்கிய காவலர்

மதுரை: இளைஞரின் முகத்தில் வெறும் கையால் காவலர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இளைஞரின் முகத்தில் வெறும் கையால் காவலர் தாக்கும் காட்சி
இளைஞரின் முகத்தில் வெறும் கையால் காவலர் தாக்கும் காட்சி

By

Published : Mar 25, 2020, 11:22 AM IST

தமிழ்நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகின்ற கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனால், மதுரையில் 19 எல்லைகள் மூடப்பட்டன. மேலும், அத்தியாவசிய கடைகள் தவிர மற்றவைகளும் மூடப்பட்டன. இது குறித்து, காவல் துறை சார்பில், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தடை உத்தரவு குறித்து அறிவிக்கப்பட்டது.

இளைஞரின் முகத்தில் வெறும் கையால் தாக்கும் காவலர்

இந்நிலையில், மற்றவர்களுக்கு கரோனா பரவும் நோக்கில் செயல்படுவோர்கள் மீது கடும் நடைவெடிக்கை மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்த நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள பாரதியார் ரோடு பகுதியில் 144 தடை உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் முகத்தில், காவலர் வெறும் கையால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


இதையும் படிங்க:
ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்
கை

ABOUT THE AUTHOR

...view details