தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கிய காவலர்கள் - தனியார் குழந்தைகள் காப்பகம்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் 50 பேருக்கு காலணிகள் வழங்கப்பட்டன.

-orphanage-children
-orphanage-children

By

Published : Dec 23, 2020, 12:21 AM IST

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் அருகே மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் கீழ் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் 50 குழந்தைகளுக்கு, மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பில் காலணிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பறையிசை நிகழ்த்தி காவல் கண்காணிப்பாளரை வரவேற்றனர். அதன் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

-orphanage-children

இதில் பேசிய காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details