தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலசரக்கு கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பல்! - மேல அனுப்பானடி பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மேல அனுப்பானடியில் பலசரக்கு கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தேடிவருகினறனர்.

grocery-store-owner-has-been-attacked-by-petrol-bomb-and-sickle-police-under-investigation
பலசரக்கு கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

By

Published : Jan 29, 2020, 7:02 PM IST

மதுரை மேல அனுப்பானடியில் சின்னக் கண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்திவருகிறார். பலசரக்கு கடையை நள்ளிரவில் அடைத்துவிட்டு புறப்பட முயன்றபோது, திடீரென்று முகமுடி அணிந்துவந்த ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் கடைக்கு அருகே வந்து கடைக்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

படுகாயமடைந்த கணேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அந்தக் கும்பல் நடமாட்டம் குறித்து அருகில் உள்ள சிசிடிவியை காவல் துறையினர் ஆய்வுசெய்து-வருகின்றனர்.

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில், கணேசன் கடந்த 16ஆம் தேதி சின்ன கண்மாய் பகுதியில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் தன் வாகனத்தில் அவர்களை இடித்து தகராறு செய்த நிலையில், கணேசன் காவல் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து, இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதனால் முத்துச்செல்வம் இந்தச் செயலை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பலசரக்கு கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்


இதையும் படியுங்க: துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி; வெளியான சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details