மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவைச் சேர்ந்த வாசகராஜா-விஜயா தம்பதியினர். இவர்கள் மணி என்ற நாட்டு இன நாயை கடந்த ஐந்தாண்டுகளாக மிகுந்த பிரியத்துடன் வளர்த்துவந்தனர்.
இறந்துபோன செல்ல நாய்க்கு கல்லறை! - இறந்துபோன நாய்க்கு கல்லறை
மதுரை: செல்லமாக வளர்த்த நாய் இறந்துபோனதையடுத்து குடும்பத்தினர் அதற்கு கல்லறை அமைத்து வழிபாடு செய்துவருகின்றனர்.
dog
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென நாய் இறந்துபோனது. அந்த நாய்க்கு முறைப்படி இறுதிமரியாதை செய்ததுடன் நாயின் இறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வீட்டில் கல்லறை அமைத்து வழிபட்டுவருகின்றனர். இறந்த நாய்க்கு குடும்பத்தினர் கல்லறை அமைத்து வழிபடுவது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெற்ற பிள்ளைகள் மீது கோபம்: நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி!