தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளழகர் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் - இணை ஆணையர் அனிதா - மதுரை சித்திரைத் திருவிழா

கள்ளழகர் புறப்பாட்டின்போது இருக்கும் இடத்தை GPS தொழில்நுட்பம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என அழகர்கோவில் இணை ஆணையர் அனிதா பேட்டியளித்தார்.

கள்ளழகர் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் - துணை ஆணையர் அனிதா
கள்ளழகர் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் - துணை ஆணையர் அனிதா

By

Published : Apr 2, 2022, 7:59 PM IST

மதுரை:அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்16ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறவுள்ளது.

'ஜிபிஎஸ்' மூலம் கள்ளழகரின் இடத்தை தெரிந்துகொள்ளலாம்:இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் இணை ஆணையர் அனிதா, 'திருவிழா 14ஆம் தேதி தொடங்கி நடைபெறயிருக்கிறது. கரோனா காலத்திற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து நிகழ்வு நடைபெறுவதால் மக்கள் ஆர்வத்தோடு உள்ளனர். வரும் 14ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார்.

கள்ளழகர் புறப்பாட்டின்போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. அது பரிசீலனை செய்யப்படும். கள்ளழகர் புறப்பாடு எதிர்சேவையின்போது GPS முறையில் அழகர் எங்கு உள்ளார். எந்த மண்டகப்படியில் உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதேபோன்று 'மதுரை காவலன்' என்ற 'மொபைல் ஆப்' வழியாகவும், கோயில் இணையதளம் மற்றும் தனி லிங்க் மூலமாகவும் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் வருகை தரும் மண்டகப்படிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மண்டகப்படி பின்புறம் சேதமடைந்துள்ளதால் அங்கு மக்கள் கூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கள்ளழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சாமிக்கு தண்ணீர் பீய்ச்சுவதை பாரம்பரிய முறைப்படி, ஆட்டுத்தோல் மூலமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் அழுத்தம் அதிகமாகி சாமி சிலை சேதாரம் அடைவதால் பக்தர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும். மேலும் நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்து காவல் துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்றார்.

இதையும் படிங்க:'நான் அரசியல்வாதி இல்லை, 'சோல்ஜர்'..!' - பீஸ்ட் ட்ரெய்லரில் விஜய்

ABOUT THE AUTHOR

...view details