தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டியது அரசின் கடமை’ - DMK Treasurer Duraimurugan

மதுரை: விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டியது அரசின் கடமை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Duraimurugan

By

Published : Aug 21, 2019, 2:38 AM IST

மதுரை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றதன் அடிப்படையில் தான் தற்போது பால் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது என்ற முதலமைச்சரின் பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனக்கு அதைப்பற்றி தெரியாது. விலைவாசி என்றால் கூடத்தான் செய்யும். அதைக் கூடாமல் பார்த்துக் கொள்வது தான் அரசாங்கத்தின் வேலையாக இருக்க வேண்டும்’ என்று பதிலளித்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

அரசு அலுவலர்கள் மக்களின் குறைகளைத் தீர்க்காத பட்சத்தில் மக்களால் தாக்குதல் நடத்த உத்தரவிடப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு குறித்த கேள்விக்கு, அவர் கூறியது தனக்கு தெரியாது. அதனால் அது பற்றி எதுவும் கூற இயலாது. அவர் ஏதாவது இந்தியில் பேசியிருப்பார் என்றார்.

மேலும், ஒரே நாடு, ஒரே தேசம் என்ற பிரதமரின் பேச்சு குறித்த கேள்விக்கு, அவர்கள் அப்படித்தான் ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள் எனக் கூறிச் சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details