தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் போராட்டக் குழு சார்பாக இன்று (அக்டோபர் 20) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் நவ. 26இல் வேலைநிறுத்தப் போராட்டம் - govt staff strike
மதுரை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநிலச் சங்க பொதுக்குழுவின் முடிவின் அடிப்படையில் வருகிற நவம்பர் 26ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் நவ. 26இல் வேலைநிறுத்தப் போராட்டம்
அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட குழுவின் சார்பில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறக்கூடிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டக் குழுவின் அறிவிப்புகள்:
- இந்தப் பொது வேலைநிறுத்தத்தின் பிரதான கோரிக்கையாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
- அதுபோல் இந்தக் குறுகிய காலத்தில் மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கம், சரண்டர் முடக்கம் போன்ற பல்வேறு சலுகைகள் முடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்கிட வேண்டும். இந்தியாவில் இருக்கக்கூடிய இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல், வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்.
- ஊழியர்கள் கட்டாய ஓய்வு உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்திய நாட்டில் இருக்கக்கூடிய தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடிய அந்தச் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்திய நாட்டினுடைய முக்கிய அடையாளமாக இருக்கக்கூடிய விவசாயம், சட்டம் அதற்கான மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்.
- அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் மாதத்துக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும்.
- பொது விநியோக முறையை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள், அனைத்து தொழிற்சங்க போராட்டக் குழுவும் பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டது.
- தொகுப்பூதியம், ஒப்பந்த தினக்கூலி, சிறப்பு தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 27ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.