திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இலங்குளம் ஆர்.சி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியராக பாக்கியா ரெக்ஸிலின் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்க மறுத்து நாங்குநேரி வட்டார கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் பாக்கியா மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அலுவலருக்கு அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை! - உயர்நீதி மன்ற மதுரைக் கிளை
மதுரை: பொருந்தா காரணங்களை கூறி இடைநிலை ஆசிரியையின் நியமனத்தை ரத்து செய்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பொருந்தா காரணங்களை கூறி உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். எனவே, நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் இரண்டு வாரத்தில் பணத்தை கரோனா நிவாரணப் பணிக்காக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
வட்டார கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கை மீது மாவட்ட கல்வி அலுவலர் நான்கு வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.