மதுரை: கரோனா பெருந்தொற்றின் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள கிராம சபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கிராம சபைக் கூட்டம் நடத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "கிராம சபை கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த வேண்டும். கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடைவெளியுடன் இருக்குமாறு இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
6 அடி தகுந்த இடைவெளி இருப்பதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கரோனா அறிகுறிகள் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது. காந்தி ஜெயந்தி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின்