மதுரை: சர்வதேச தரத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக அமையவுள்ள கலைஞர் நூலகம், அதிநவீன வசதி கொண்டதாக 114 கோடி செலவில் அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மதுரை நத்தம் சாலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.
கலைஞர் நினைவு நூலகப் பணிகள் வருகின்ற 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணியில் முதற்கட்டமாக ஊழியர்கள் தங்கும் பகுதி, தரையை சமதளப்படுத்துதல் மற்றும் காங்கிரீட் உருளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மதுரை பொதுப்பணித்துறையின் கட்டடம் மற்றும் பராமரிப்புப் பிரிவு கண்காணிப்புக் குழுவானர் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:SA vs IND 2nd Test | தாக்கூர் தாண்டவம்; புரட்டி எடுத்த புஜாரா - இந்தியா முன்னிலை