தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு பெண் மருத்துவர் உயிரிழப்பு! - Woman physician dies in a private hospital with dengue symptoms

மதுரை: டெங்கு அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, அரசு மருத்துவமனையின் பெண் மருத்துவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அரசு பெண் மருத்துவர் உயிரிழப்பு

By

Published : Nov 13, 2019, 11:25 PM IST

மதுரை மாவட்டம், விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா (28). இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு, வந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டெங்கு அறிகுறிகளுடன் காலை அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பிருந்தா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 190 கிலோ கிராம் குட்கா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details