மதுரை:ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி மாலதி 2017ஆம் ஆண்டு பழனி முருகன் கோயிலுக்கு உறவினர்களுடன் பாத யாத்திரையாகச் சென்றுள்ளனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலதி சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதி படுகாயம் அடைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கவனக்குறைவாக அரசுப் பேருந்தைச் செலுத்தியதால் மாலதி உயிரிழந்ததாகக் கூறி, அவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.