மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ். அரசு பேருந்து ஓட்டுநரான இவர், குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 9சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் தங்க நகை கொள்ளை - Golden jewel robbery
மதுரை: அலங்காநல்லூரில் அரசு பேருந்து ஒட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் தங்க நகை கொள்ளை
இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிய ஜெயதாஸ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.