தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்! - SpiceJet flight

மதுரை: துபாயில் இருந்து மர அரவை இயந்திரத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம், மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் கடத்தல்
தங்கம் கடத்தல்

By

Published : Dec 23, 2020, 4:50 PM IST

துபாயில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மதுரை வந்த பயணிகளிடம், மதுரை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை செய்தனர்.

மேலும், அவரது உடமைகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்தச் சோதனையில் மர அறுவை எந்திரத்தின் உள் பாகமாக மறைத்து வைக்கப்பட்ட 350 கிராம் எடையுள்ள ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரிடம் மதுரை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details