மதுரையில் வருகின்ற மே 19ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுரை முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் 3.5 கிலோ தங்கக்கட்டி பறிமுதல்! - Election flying squad
மதுரை: சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 3.5 கிலோ தங்கத்தையும், அதற்குப் பயன்படுத்திய காரையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே சோதனை மேற்கொண்டபோது, அவ்வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் உரிய ஆவணங்களின்றி 3.5 கிலோ தங்கக்கட்டி இருப்பது தெரியவந்தது. பின்னர் காரை ஓட்டிவந்த பிரவீன் சிங் என்பவரிடம் விசாரித்ததில் சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் தங்கக்கட்டி கொண்டுசென்றது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தையும், காரையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.