மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணி ஒருவர் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நுண்ணறிவுப் பிரிவின் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள், நேற்று மாலை வெளிநாட்டிலிருந்து வந்த விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் மகன் தேவநாத் என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது அவர் கொண்டுவந்த 'டிரில்லர்' இயந்திரத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.
விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் தேவநாத்திடம் இருந்து 350 கிராம் வட்ட வடிவிலான தங்கத்தை இலாகா நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். தங்கம் கடத்திவந்த தேவநாத்தை கைது செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : விமான நிலையத்தில் ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!