மதுரை விமான நிலையத்திற்கு தங்கக் கட்டிகள் கடத்திவருவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் அலுவலர்கள் சோதனை செய்தனர்.
மதுரையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - தங்க கட்டிகள் கடத்திவருவதாக தகவல்
மதுரை: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
![மதுரையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4620003-thumbnail-3x2-mdu.jpg)
ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த தங்க கட்டிகள்
அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது ஜீன்ஸ் பேண்டில் சுமார் 706.31 கிராம் எடை கொண்ட 27 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த தங்க கட்டிகள்
இதனையடுத்து, சங்கரிடமிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!