தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல கால்டாக்சி நிறுவனத்தின் காரில் வந்து ஆடு திருடும் கும்பல் - சிசிடிவி காட்சி வெளியீடு - madurai district news

மதுரை: பிரபல கால்டாக்சி நிறுவனத்தின் காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சாலையில் நின்றுக் கொண்டிருந்த 10 ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஆடு திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி
ஆடு திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி

By

Published : Oct 21, 2020, 2:00 PM IST

மதுரை மாவட்டம் கரும்பாலை கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் தனக்கு சொந்தமான 10 ஆட்டுக்குட்டிகளுக்கு தீவனம் போடுவதற்காக மதுரை சட்டக் கல்லூரி எதிரே கட்டி வைத்திருந்தார்.

அப்போது அங்கு பிரபல கால்டாக்ஸி நிறுவனத்தின் காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் நீண்ட நேரம் நிற்பதுபோல் நடித்துள்ளனர். பின்னர் கட்டிப் போட்டிருந்த 10 ஆடுகளையும் ஒவ்வொன்றாக நூதன முறையில் கும்பல் காரில் திருடிச்சென்றனர்.

ஆடு திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி

இச்சம்பவம் தொடர்பாக முத்துப்பாண்டி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details