மதுரையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமாகா” அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் அவசியமானது. மீனவர்கள் பிரச்னைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஒரு சிலரின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் தவறான வழியில் கொண்டு செல்லப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். திமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து சுமுகமாக பேசுவோம்.