மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் சிட்கோ சங்க நிர்வாகக் கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்திற்குள் வாளி, கணினி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து அலுவலர்கள் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் ஒட்டப்பட்ட பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, பெட்டி பெட்டியாக அடுக்கி வைப்பட்டிருந்த அந்தப் பொருள்கள் அனைத்தையும் தேர்தல் படையினர் பறிமுதல் செய்தனர்.