மதுரை கீரைத்துறை அருகே கஞ்சா வியாபாரிகள் பதுங்கியிருப்பதாக மதுரை மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாழைத்தோப்பு தண்டவாளம் அருகே கீரைத்துறை சிந்தாமணி ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (25), அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (19), வாழைத்தோப்பு சக்திவேல் (24) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 30 கிலோ கஞ்சா மூட்டையையும் பறிமுதல் செய்தனர்