மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று (மே.05) மாலை இரு தரப்பட்ட சமுதாயத்தினர் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில், வலையங்குளம் அருகே உள்ள சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி மகன் வீரணன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த பெருங்குடி காவல் துறையினர் வீரணன் உடலை மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சூதாட்டத்தில் தகராறு - ஒருவர் படுகொலை! - Dispute in gambling
மதுரை: நண்பர்களோடு சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சூதாட்டத்தில் தகராறு