மதுரை - தேனி மெயின் ரோடு அருகே தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
மதுரை: பர்னிச்சர் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் வாகனம் இரண்டு வரவழைக்கப்பட்டு மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான மரசாமான்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காவல் துறையினரின் விசாரணையில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மெர்குரி விளக்கு கம்பத்திலிருந்து திடீரென்று தீப்பொறியானது மரசாமான்கள் மீது விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மதுரை ஜவுளி மில்லில் பயங்கர தீ விபத்து