தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்த காளைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்! - கிராம மக்கள்

மதுரை: பாலமேடு அருகே இறந்து போன கோயில்காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள், அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

கோயில் காளைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்
கோயில் காளைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்

By

Published : Feb 20, 2021, 9:45 PM IST

மதுரை மாவட்டம் பாலமேடு அருகேள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தின் சின்னம்மன் கோயில் காளை ஒன்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.

இந்த காளை கடந்த 25 ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

மேலும், தனது கிராமத்திற்காக பல்வேறு பரிசுகளைக் கொண்டு வந்து குவித்ததை கிராம மக்கள் பெருமையோடு நினைவு கூறுகின்றனர்.

இத்தகைய பெருமைமிகு ஜல்லிக்கட்டு காளை உடல் நலக் குறைவின் காரணமாக இறந்ததால் வெள்ளாளப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கோயில் காளை இறந்த செய்தி கேட்டு சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் நேரில் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர்

கோயில் காளைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்

மேலும், மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து கிராம மக்கள் இறந்த கோயில் காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் வட்டாட்சியர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details