கேரளாவை கலக்கி வரும் ஃபுல் ஜார் வகை சோடா பானம் தற்போது மதுரையிலும் அறிமுகமாகி வாடிக்கையாளர்களை பெருமளவு ருசிக்க வைத்துள்ளது. சில இடங்களில் ஃபுல் ஜார் சோடா சேலஞ்ச் என்று அறிமுகம் செய்து போட்டிகளையும் நடத்துகின்றனர். ஃபுல் ஜார் சோடாவை மிகவும் ஆரோக்கியமான பானம் எனக் கூறி விற்பனையாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
மதுரையை கலக்கும் ஃபுல் ஜார் சோடா -ஆர்வத்துடன் பருகும் மக்கள் - இஞ்சி, புதினா
மதுரை: மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ள ஃபுல் ஜார் சோடாவை மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்கள் வாங்கி பருகுகின்றனர்.

இதனை விளம்பரப்படுத்தும் பைசைக்கிள் பர்கர் இளைஞர்கள் அசோக் மற்றும் பூபாலன் கூறுகையில், உணவு செரிமானத்திற்கு பேருதவி புரியும், உடம்புச் சூடு ஆரோக்கியம் சார்ந்த கலவை கைகளையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான் ஃபுல் ஜார் சோடாவின் சிறப்பம்சம். பல கவர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிட்டு அவதிப்படுகின்றனர்.
மதுரை மக்களின் உடல்நலத்தில் எங்களுக்கும் அக்கறை உள்ளது. ஃபுல் சார் சோடாவில் புதினா இஞ்சி சாறு கலந்து விற்பனை செய்கிறோம். இதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது, இந்த சுவையில் மயங்கிய நிறைய வாடிக்கையாளர்கள் எங்களை தேடி வந்து பார்க்கச் செல்கிறார்கள் எனக் கூறினர்.