தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழே கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்குப் பாராட்டு! - பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செய்த காரியம்

மதுரை: கீழே கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலரின் நேர்மையை திருநகர் காவல் ஆய்வாளர் பாராட்டியுள்ளார்.

மதுரையில் நடந்த திருட்டு
மதுரையில் நடந்த திருட்டு

By

Published : Jun 16, 2020, 7:35 AM IST

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கௌதம் என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் 14) திருநகர் கனரா வங்கி முன்பு தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகையை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஊர்க்காவலர் சந்திரசேகர் என்பவர் ரோந்துப் பணியில் இருந்தபோது கண்டெடுத்து திருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்தத் தங்க நகையை நேற்று (ஜூன் 15) திருநகர் காவல் ஆய்வாளர் கணேசன் நகையின் உரிமையாளரைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து நகையை ஒப்படைத்தார்.

மேலும் நேர்மையாகச் செயல்பட்ட ஊர்க்காவலர் சந்திரசேகரை திருநகர் காவல் ஆய்வாளர் கணேசன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details