தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்திய நண்பர்கள்! - madurai district news

மதுரை: நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி சக நண்பர்கள் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்தி அனுசரித்த நண்பர்கள்!
தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்தி அனுசரித்த நண்பர்கள்!

By

Published : Aug 19, 2020, 7:55 PM IST

மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (23) என்ற இளைஞர், கடந்த ஓராண்டிற்கு முன்பு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சட்டம் பயின்றார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்குறைவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

மரக்கன்றுகள் மற்றும் நிவாரண பொருள்கள்

அவரது திடீர் உயிரிழப்பு அவருடன் பயின்ற சக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நண்பர்கள் ஏதேனும் மக்களுக்கு உதவிகரமாக செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து, சோமசுந்தரத்துடன் பயின்ற மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்களுடைய சேமிப்பின் மூலமாக கிடைத்த பணத்தைக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் மற்றும் ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

நண்பனின் நினைவு தினத்தை அர்த்தப்பூர்வமாக அனுசரித்த நண்பர்கள்

ஒரு குடும்பத்திற்கு ஒரு மாத காலத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

சக தோழனின் நினைவாக கல்லூரியில் பயின்ற மாணவர்கள் ஒருங்கிணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய சம்பவம் மதுரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நேதாஜியின் 75ஆவது நினைவு தினம்

ABOUT THE AUTHOR

...view details