தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் தடம் புரண்ட சரக்கு ரயில் - மற்ற ரயில்கள் இயங்குவதில் சிக்கல்! - மதுரையில் தடம் புரண்ட சரக்கு ரயில்

மதுரையில் டிராக்டர்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்ட நிலையில், ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச்செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மதுரையில் தடம் புரண்ட சரக்கு ரயில்
மதுரையில் தடம் புரண்ட சரக்கு ரயில்

By

Published : Apr 25, 2022, 2:57 PM IST

மதுரை:வேளாண்மைக்குப் பயன்படும் டிராக்டர் வண்டிகளை ஏற்றிச்செல்லும் சரக்கு ரயில் ஒன்று மதுரை கூடல்நகரில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்குப் பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலின் கடைசி சரக்குப் பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் திடீரென தடம் புரண்டு செல்லூர் அருகே ரயில் பாதையைவிட்டு இறங்கியது.

இதன் காரணமாக மதுரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற குருவாயூர்-சென்னை விரைவு ரயில் மதுரை தத்தனேரி வைகை பாலத்தில் நிறுத்தப்பட்டது. பிறகு அந்த ரயில் மீண்டும் மதுரை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டியைச் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:Video: கடற்கரை ரயில் நிலையத்தில் நடந்த விபத்து - வெளியானது சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details