அமெரிக்காவைச் சேர்ந்த ஜெயஸ் காந்தர், ப்ரொஃபைல் காந்தர் இருவரும் பட்டாணி, பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் மதுரையை சேர்ந்த சிங்காரவேலு, சிவ சிங்காரவேலு இருவருக்கும் சுமார் 19 கோடி மதிப்பிலான பருப்பு மற்றும் பட்டாணியை இறக்குமதி செய்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனத்திடம் பட்டாணி இறக்குமதியில் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு - பட்டாணி
மதுரை: அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து பட்டாணி இறக்குமதி செய்து 19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உள்பட 6 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு, பட்டாணிக்கு கொடுக்க வேண்டிய 19 கோடி ரூபாய் பணத்தை மூன்று ஆண்டுகளாக கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெயஸ்காந்தர் - ப்ரோஃபைல் காந்தர் ஆகிய இருவரும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அப்புகாரின் அடிப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த பிரபல வங்கி மேலாளர், சேர்மன், மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான சிங்காரவேலு, சிவ சிங்காரவேலு உள்பட 6 பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.