மதுரை:கடந்த அக்.30ஆம் தேதி மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அத்துமீறி நுழைந்து கல்லூரி மாணவர்களை அச்சுறுத்தி, ஈவ் டீஸிங் செய்த நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மதுரை மாநகரில் உள்ள பெண்கள் கல்லூரி வளாகத்தில் தங்களது இருசக்கர வாகனங்களில் சில இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து, வாகனங்களை அதிவேகமாகவும் அபாயகரமாகவும் இயக்கி, அங்கிருந்த கல்லுாரியின் காவலாளியை மிரட்டியும் தாக்கியும் உள்ளனர்.
அத்தோடு கல்லுாரி மாணவிகளை அச்சுறுத்தும் விதமாகவும்; பொது ஒழுங்கிற்கு குந்தகமான வகையிலும் செயல்பட்டதாக சம்பந்தபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சூர்யா, அருண், அருண்பாண்டியன், நவீஸ் ஆகிய நான்கு பேர் இன்று (நவ.22) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தியன்று பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து ரகளை செய்த 10 பேர் கைது