தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது - தொடர் கொள்ளையர்கள் கைது

மதுரை: கரிமேடு அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த நான்கு பேரை, காவல் துறையினர் 12 மணி நேரத்திற்குள் கைதுசெய்து சிறையினர் அடைத்தனர்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

By

Published : Sep 17, 2020, 8:06 PM IST

மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (செப்டம்பர் 16) அடுத்தடுத்து இரண்டு வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரிமேடு காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த மதன், மாரிமுத்து, பிரகாஷ், 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர்கள் மீது மதுரை மாநகரில் ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம், செல்ஃபோன் உள்ளிட்டவை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், துரிதமாக செயல்பட்டு, 12 மணி நேரத்திற்குள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை கைதுசெய்த கரிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, உதவி ஆய்வாளர் சக்கரவர்த்தி ஆகியோரை மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிகுமார் வெகுவாக பாராட்டினார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி - முகமூடி கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி

ABOUT THE AUTHOR

...view details