மதுரை: மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தியானேஸ். இவர் தனது நண்பருடன் வாடிப்பட்டியிலிருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு எதிர்புறமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் தேசபுனிதன், சந்திரன் என்னும் இருவர் வந்துள்ளனர். இதில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் நான்கு பேரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இருசக்கர வாகனங்கள் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி பின்னர் அருகிலிருந்தவர்கள் உடனடியாக நால்வரையும் மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
மின்னல் வேகத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி, நால்வர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓடும் காரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மடக்கி நிறுத்திய காவலர் - ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு!