மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அதே ஊரைச் சேர்ந்த ஜென்சிராணி என்ற பட்டதாரி பெண் ஊராட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சந்தானத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சந்தானத்தின் பேத்தி வெற்றி 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், எங்களது ஊரில் குடிநீர் மற்றும் சாலை வசதி, மின்சார வசதி மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை.
அந்தக் குறையைப் போக்குவதே எனது முதல் லட்சியமாகக் கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கினேன். தற்போது, அவை அனைத்தையும் பூர்த்தி செய்வதே எனது முதற்கட்ட பணி என்றார்.
இதையும் படிங்க: வாக்குகளை முழுமையாக எண்ணாமல் வெற்றி அறிவிப்பு: அமமுகவினர் குற்றச்சாட்டு