மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், சிடார் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக 'கரோனாவை சந்திப்போம் - குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு' என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கரோனா குறித்த தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினர்.
குழந்தைகளுக்கு உந்துசக்தியாக அமையும் புத்தகம்
இதையடுத்து சிடார் அமைப்பின் நிர்வாக அறங்காவலரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் முதல்வருமான முனைவர் சின்னராஜ் ஜோசப் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "வெளியிடப்பட்ட கரோனா கையேடு, குழந்தைகளுக்கு கரோனா குறித்த புரிதலை மட்டுமன்றி தங்களை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு இதன் தாக்கத்தை எடுத்துச் சொல்லவும், மிகப் பயனுள்ளதாக இருக்கும்.