தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தோளில் போட்டிருக்கும் துண்டு போன்றது கூட்டணி’  - செல்லூர் ராஜூ - anna 115th birthday

”கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்; தேவையெனில் போட்டுக் கொள்வோம், இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

former-minister-sellur-raju-press-meet-in-madurai
former-minister-sellur-raju-press-meet-in-madurai

By

Published : Sep 15, 2021, 5:29 PM IST

மதுரை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”கூட்டணி என்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை” என்றார்.

இதையும் படிங்க : ’சேப்பாக்கம் சேகுவேரா...’ - உதயநிதியைத் தாக்கும் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details