தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போகாத ஊருக்கு வழி சொல்கிறார் வேளாண்மைத்துறை அமைச்சர் - ஆர்பி உதயகுமார் - ஆர்பி உதயகுமார்

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கோரிக்கை வைத்தால் , புள்ளி விவரம் தவறாக உள்ளது என வேளாண் துறை அமைச்சர் பதில் கூறுவது ஏற்புடையது அல்ல என சட்டமன்ற உறுப்பினர் ஆர்பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

போகாத ஊருக்கு வழி சொல்கிறார் வேளாண்மை துறை அமைச்சர் - ஆர் பி உதயகுமார்
போகாத ஊருக்கு வழி சொல்கிறார் வேளாண்மை துறை அமைச்சர் - ஆர் பி உதயகுமார்

By

Published : Oct 7, 2022, 6:31 AM IST

மதுரை: சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு திட்டங்களை செய்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி நீர் மேலாண்மை மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி அதன் மூலம், காவிரி பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு கண்டார்.

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டம் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. நீர்நிலைகளை மேம்படுத்தும் வண்ணம் 1,132 கோடி மதிப்பில் 5,586 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டன. அதேபோல் 9,006 கோடி அளவில் 50.13 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 5,318 கோடி அளவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 லட்சம் சிறு ,குறு விவசாயிகள் பயன் பெற்றனர். அதேபோல் 2021ஆம் ஆண்டில் 12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகளில் இருமுறை விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அத்திக்கடவு, அவிநாசி திட்டம் 1,652 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் 58 கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10,41,315 விவசாயிகளுக்கு, 827 கோடி மதிப்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 2,247 கோடி அளவில் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. ரூ.14,440 கோடியில் விவசாயிகளின் 100 ஆண்டு கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வறட்சி மாவட்டங்கள் செழிப்படையும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் மூன்று முறை 142 அடியாக தேக்கப்பட்டது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தால், அதற்கு வேளாண் துறை அமைச்சர் புள்ளி விவரம் வேறுபாடு உள்ளது என்று கூறுகிறார். நிவாரண உதவியை இன்று தருகிறோம், நாளை தருகிறோம் என்று சொல்ல தயக்கம் ஏன்? புள்ளிவிவரம் தவறு என்று கூறி போகாத ஊருக்கு வழி சொல்லும் வகையில் அமைச்சர் பதில் உள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டத்திற்கு 10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள். 2,000 கோடியில் 200 தட்டுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். சென்னை நகர் ஆறுகளை பாதுகாப்பிற்கு 5,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள். பேச்சிப்பாறை அணை சீரமைக்கப்படும். நொய்யல் ஆறு சீர்படுத்தி, பவானி ஆறு,அமராவதி ஆறுகளில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க திட்டம் போட்டார்கள்.

பெரியார், வைகை பிரதான பாசன கால்வாயிலிருந்து இருந்து சாத்தையார் அணைக்கு புதிய கால்வாய் அமைத்து, சாத்தையார் அணை ஆயகட்டுபகுதி அதிகரிக்கப்படும் என்று கூறினார்கள். கடலூர் வெள்ள பாதுகாப்புக்கு அரிவாள் மூக்கு வடிகால் திட்டம் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். இதை எல்லாம் செய்தார்களா?

விவசாயிகள் நலம் சார்ந்து எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தால் அந்த புள்ளி விவரத்தை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும், நீங்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறை, வேளாண் துறை ஆகிய துறைகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் வேதனைக்கும் வடிக்கும் கண்ணீருக்கும் வழி கேட்பது தவறா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு விலை என்று பதில் சொல்வது போல அமைச்சர் பதில் உள்ளது.

விவசாயிகளின் வேதனைக்கு விடை கேட்டால் இன்று தருவோம், நாளை தருவோம் என்று கூற வேண்டியது தானே? அதற்கு பதில் அறிக்கையில் எழுத்து பிழை உள்ளது என்று புதிய விஞ்ஞானி போல் கண்டுபிடித்து வேளாண்துறை அமைச்சர் பதில் கூறுகிறார்" என அறிக்கையில் உதயகுமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நீக்கம் - திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details