தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு! - etv news

மதுரை: தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 100 திருநங்கைகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள்
திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள்

By

Published : Jun 5, 2021, 9:30 PM IST

கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில், கடந்த மே 24ஆம் தேதி முதல், ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலைகளில் வசிக்கும் யாசகர்கள், ஆதரவற்றோர், முதியோர்களுக்கு தன்னார்வலர்களும், சமூக நல அமைப்புகளும் உணவு, அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.
மதுரையில் திருநங்கைகள் வறுமையில் தவித்து வருவதை அறிந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப், மதுரையில் வசிக்கும் நூறு திருநங்கைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 வகையான மளிகைப்பொருள்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் வழங்கினார்.
இது குறித்து, திருநங்கை சுஜாதா கூறுகையில், ’’முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் ஜெயபிரதீப்பிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு அரிசி பருப்பு மளிகை பொருள்கள் உள்பட வழங்கியுள்ளார். திருநங்கை சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: வட உள் மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன மழை

ABOUT THE AUTHOR

...view details