இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
இரண்டு லட்சம் தொண்டர்களுடன் திமுக நோக்கிப் பயணம்... - ormer minister admk rajakannappan
மதுரை: இரண்டு லட்சம் தொண்டர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
அதிமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேருடன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பிப்ரவரி 23ஆம் தேதி அக்கட்சியில் இணைய உள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் பக்குவம், கட்சியை வழிநடத்தும் விதம் ஆகியவற்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும்.
மத்திய அரசுக்கு அடிமையாக அதிமுக இருப்பதால் திமுகவில் இணைந்து உழைக்க உள்ளேன். தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுவதால் சிலர் அங்கு உள்ளனர். அதிமுக தலைவர்கள் மத்திய அரசுக்காக தான் ஆட்சி நடத்துகிறார்கள், என்றார்.