மதுரை: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநகர் மாவட்டக் குழுச் செயலாளர், மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகனின் மனைவி பூங்காவனம் (68) உடல் நலக்குறைவு காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (அக்.21) காலை 7.40 மணி அளவில் காலமானார். தற்போது அவருடைய உடல் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு தத்தனேரி மயானத்தில் நடைபெறும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகனின் மனைவி காலமானார்! - Madurai Mohan Wife Passes away
Madurai MP Po Mohan: மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன் மனைவி காலமானார்.
Former Madurai MP P Mohan Wife passes away
Published : Oct 21, 2023, 2:17 PM IST