தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேதனை! - கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு

மதுரை: கரோனா தொற்று குறைந்து கொண்டிருந்தாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் வேதனையளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார்
முன்னாள் அமைச்சர் உதயகுமார்

By

Published : Jun 5, 2021, 6:14 AM IST

மதுரை மாவட்டம், கல்லுப்பட்டி பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் நிர்வாக அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா தொற்றின் பாதிப்புகள் தற்போது குறையத் தொடங்குவது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அதே வேளையில் கடந்த மே மாதம் மட்டும் 10ஆயிரம் நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு முன்பு ஓராண்டில் கரோனாவால் 14 ஆயிரம் நபர்கள் இறந்துள்ளனர். தற்போது தினசரி 500 நபர்கள் கரோனாவால் உயிரிழந்து வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், காய்ச்சல் மரணங்களையும் சேர்த்து பார்த்தால் 700 முதல் 1000 வரை இறப்பதாக வருகின்ற புள்ளி விவரக் கணக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை காரணமாக கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. இருந்தபோதிலும், மருத்துவ கட்டமைப்பை உருவாக்க அரசு எடுத்த நடவடிக்கை, எந்த அளவிற்கு மக்களுக்குப் பயனளித்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களின் உயிரைக் காக்க போர்க்கால அடிப்படையில் குறுகிய கால அவகாசத்தில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக கரோனா உயிரிழப்பைத் தவிர்க்க போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்மாவட்டங்களில் கரோனா உயிரிழப்பு நாள்தோறும் உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details