திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமரன் தாஸ் (42). இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிந்துவந்தார். கரோனா ஊரடங்கு காலம் என்பதால் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வடமாநில இளைஞர்?
இதனால், மதுரை மாவட்டம், உத்தங்குடி பகுதியில் தனியாக வீடு எடுத்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சமையல் பணிக்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம் ஆனந்த் கெளதம் என்ற இளைஞரை குமரன் தாஸ் அழைத்துவந்துள்ளார்.
கொலை
இதையடுத்து, வடமாநில இளைஞரிடம் குமரன் தாஸ் வலுக்கட்டாயமாக தன்பாலூறவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் ராம் ஆனந்த் குமரன் தாஸை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட வடமாநில இளைஞர் ராம் ஆனந்த் கைது
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குமரன்தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து வடமாநில இளைஞர் ராம் ஆனந்தை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:தன்பால் உறவுக்கு மறுத்தவரை கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறிப்பு: ஆட்டோ ஓட்டுநர் கைது