தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக திடீரென வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இந்நிலையில் மதுரை மாநகரில் வைகையாற்றின் பகுதிகளில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓட தொடங்கியதால், படித்துறை பகுதியில் உள்ள திரைப்படங்கள் மூடப்பட்டதோடு அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - மதுரை மாவட்டம் செய்திகள்
மதுரை: வைகை ஆற்றில் கரைபுரளும் வெள்ளத்தால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வைகை ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதோடு, ஆற்றில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மழை வெள்ளம் காரணமாக நீரோட்டம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஆற்றின் கரையோரங்களில் இறுதிச்சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றக் கூடியவர்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஆற்றின் கரையோரங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.